வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை, கரடி,மான், காட்டுப்பன்றி, சிறுத்தை புலி, மிளா உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன மேலும் வனவிலங்குகள் அவ்வப்போதுவேட்டை நாய்களுடன் வன விலங்குகளை சமூக விரோதிகள் வேட்டையாடுவது அதிகரித்து வரும் நிலையில் வனத்துறையினர் மலைப் பகுதிகளுக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றார். இந்த நிலையில் சிவகிரி தேவியார் பீட் அரசு காப்பு காட்டிற்குள் அத்து மீறி நுழைந்து வன உயிரினங்களை வேட்டையாட செல்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் வனப்பகுதிகளுக்குள் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தேவிபட்டணம் பகுதியைச் சேர்ந்த சரவணன், காளிராஜ், மகேந்திரன், பிரவீன், ரவிச்சந்திரனை பிடித்து வனத்துறை ஊழியர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில் வேட்டை நாய்களுடன் வன உயிரினங்களை வேட்டையாட முயன்றதாக ஒப்புக்கொண்டதன் பேரில் 5 பேரை கைது செய்து தலா 25,000 வீதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இணக்க கட்டணமாக விதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வன உயிரினங்களை வேட்டையாடுவது குறித்து சிவகிரி வனசரக அலுவல எண்: 04636 - 298523 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர் வனப்பகுதிகளுக்குள் அத்து மீறி செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.