சொத்துவரி நிலுவையை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்

சொத்துவரி நிலுவையை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்

திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி நிலுவையை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.


திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி நிலுவையை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி நிலுவையை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் கமிஷனர் பவன்குமார் அறிவிப்பு! திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி நிலுவையை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என கமிஷனர் பவன்குமார் அறிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-ன்படி அரையாண்டுக்கான சொத்து வரியினை அரையாண்டு தொடங்கும் முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஏப்ரல் 30-ந் தேதிக்குள் சொத்து வரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகையும், 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது சொத்திற்கான வரி மற்றும் கட்டணங்களை நேரடியாக வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், ,4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையை பயன்படுத்தலாம். Use "Quick Payment" or "Register & Login" to https://tnurbanepay.tn.gov.in சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலங்களில் அமைந்துள்ள வரிவசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், திருப்பூர் மாநகராட்சி இணையதளம் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 2024-25ம் ஆண்டிற்கான தங்களது சொத்து வரியினை உடனடியாக செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டு, மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story