காரில் கஞ்சா பொட்டலம் - தட்டி தூக்கிய போலீஸ்

காரில் கஞ்சா பொட்டலம் - தட்டி தூக்கிய போலீஸ்

கஞ்சா கடத்தல்

பெரம்பலூர்: காரில் கஞ்சா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்கர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் ஒன்று வாங்கியுள்ளார். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போனது. இது குறித்து இவர் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் காரில் பொருத்தப்பட்டிருந்த GPS கருவி மூலமாக காரை கண்டுபிடிக்க முயற்சித்தபோது. அது வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த வாரம் GPS கருவி திடீரென மீண்டும் வேலை செய்ததை தொடர்ந்து, அவரது மொபைல் நம்பருக்கு தகவல் சென்றுள்ளது. அப்பொழுது கார் கேரளாவில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி ஆந்திர மாநில பகுதியில் இருப்பதை அஸ்கர் தெரிந்து கொண்டார். இது குறித்து மீண்டும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தனது கார் தமிழக எல்லையில் பயணித்க் கொண்டிருப்பது GPS மூலமாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காரை கண்டுபிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் வேறு ஒரு காரில் அஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் தமிழகம் வந்துள்ளனர். அப்போது சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார் வருவது GPS கருவி மூலமாக தெரிந்துள்ளது பெரம்பலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் கார் வருவதை தெரிந்து கொண்ட அஸ்கர் இது குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்து திருமாந்துறை சுங்கச்சாவடியில் தனது காரை பிடிக்க கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட, நிலையில் மங்களமேடு போலீசார் கவனக்குறைவாக செயல்பட்டு காரை விட்டு விட்டனர். இதனை தொடர்ந்து பெரம்பலூர் அருகேயுள்ள வல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தார் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் அஸ்கர் தனது காரை .நிறுத்திவிட்டு, காணாமல் போன தனது கார் எதிர் திசையில் மிக அருகே வருவதை GPS கருவி மூலமாக தெரிந்து கொண்டார்.

உடனே அங்கு தார் சாலை போடும் பணியாளர்களிடம் விவரத்தை கூறி சாலையை பேரிகார்டு கொண்டு மறித்துள்ளனர். அப்பொழுது வாகனங்கள் நிறுத்தப்பட்டு மெதுவாக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் உதவியுடன் காரை மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்து 6 பேர் இறங்கிய நிலையில், 3 பேர் தலை தப்பி ஓடியுள்ளனர். அவர்களை, அஸ்கர் மற்றும் அவர்களின் நண்பர்கள் உதவியுடன் போலீசார் விரட்டி சென்ற நிலையில், "காரின் அருகே நின்ற மற்ற மூவரும் தப்பி ஓடிவிட்டனர். முதலில் தப்பியோடிய 3 பேரை மட்டும் பிடித்த போலீசார் அவர்களை காருக்கு அழைத்து வந்து, காரை சோதனையிட்ட போது அதில் சுமார் 150 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுதது காருடன் அவர்கள் மூன்று பேரையும் மங்களமேடு காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து தப்பி ஓடிய ..மூன்று பேரையும் தேடிய நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த இரண்டு பேரை மட்டும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்(32), பாலா(33, அஜித்(36), மதன்(30) மற்றும் வெள்ளையன்(33) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கேரளா பகுதியில் நின்றிருந்த அஸ்கரின் காரை கடத்தி வந்து அந்த .கார் மூலமாக ஆந்திரா மாநிலம் கார்கோடா பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் விற்பனை செய்ய சென்றது தெரியவந்துள்ளது. மேலும் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இந்த வழக்கை மதுவிலக்கு அமலாக்க, பிரிவுக்கு மாற்றியமைத்து அவர்களிடம் கார், கஞ்சா மற்றும் குற்றவாளியை ஒப்படைத்தனர்.

மேலும் இவர்கள் பின்னாணியில் கஞ்சா கும்பல் ஏதேனும் உள்ளதா, இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற மாரியப்பன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட காரில், கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story