விழுப்புரம் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
விழுப்புரம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் கதிரவன்.இவரது மனைவி மலர். இவர் அதேபகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்திவருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு நடந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மலரின் கழுத்தில கிடந்த 5 பவுன்நகையை பறித்தனர். இதில் பதறிய அவர் திருடன். திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் நகையுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story