திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் 5மாடி கட்டிடம்
அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு ரூ.60 கோடிமதிப்பில் கட்டுமான பணிகள் நடை பெற்று வருகிறது. இதில் 5 மாடியுடன் கட்டப் படும் புதிய கட்டிடத்தில் தரைத்தளத்தில் அவசர சிகிச்சைபிரிவு, விபத்து பிரிவு,
காவலர் விசா ரணை அறை, மருத்துவர்கள் அறை, நவீன சி.டி.ஸ்கேன், ரத்தசுத்திகரிப்பு பிரிவு, கண்சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும்,முதல் தளத்தில் சிகிச்சை அறை, மருத்துவ கருவிகள் அறை, குழந்தைகள் சிகிச்சை பிரிவு போன்றவைகளும் அமைய உள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதன்மை குடிமை மருத்துவர் ரவிச்சந்திரன், மகப்பேறு மருத்துவர் கள் சாந்தகுமாரி, முரளிஸ்ரீ, எலும்பியல் மருத்துவர் சுரேஷ்குமார், குழந்தைகள் மருத்துவர் கீர்த்தனா மற்றும் செவிலியர்கள்,
மருத்துவமனை ஊழியர்கள் உடன் இருந்தனர். கட்டுமான பணி கள் இந்த ஆண்டு இறுதியில் முடிந்து திண்டிவனம் அரசு மருத்துவமனை பல்நோக்கு புதிய 5 மாடி கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.