சுற்றித் திரிந்த 5 மாடுகளை பிடித்து அபராதம்; நகராட்சி ஆணையாளர் அதிரடி
ஆரணி பஜாரில் சுற்றித் திரிந்த 5 மாடுகளை பிடித்து அபராதம் விதித்து நகராட்சி ஆணையாளர் அதிரடி
ஆரணி பஜாரில் வீதியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த 5 மாடுகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கொண்டு சென்று, பின்னர் மாட்டின் உரிமையாளர்களை வரவழைத்து அபராதம் விதிக்கப்பட்டு நகராட்சி ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகின்றன.
தி.மலை மாவட்டம் ஆரணி நகராட்சி பகுதிகளில் அண்மைக்காலமாக பஜாரில் வீதியில் சுற்றி திரிந்து வரும் மாடுகளின் வாகன ஓட்டிகளை அடிக்கடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி, மாடுகள் சாலையில் திரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் சில சமயம் விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு காயங்கள் அமைகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வந்ததையும், அண்மையில் மாடுகள் சாலைகளில் திரிந்து வரும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் நகர பகுதிகளிலுள்ள சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கபட வேண்டும் என்றும் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி அறிவுறுத்தலின் படி நகராட்சி ஆணையாளர் குமரன் தெரிவிக்கையில்: இனிவரும் காலங்களில் தொடர்ந்து நகர பகுதியான தெருக்களில், பஜாரிலும் சுற்றித் திரியும் மாடுகளை பணியாளர்களைக் கொண்டு பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். பிடித்த மாடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் ஐந்து மாடுகளை சாலையில் சுற்றித்திரிந்ததை பிடிக்கப்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஆணையாளர் குமரன் தெரிவித்தார்.