தொழிலாளி அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறை
தொழிலாளி அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை. பூதப்பாண்டி கோர்ட் தீர்ப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (33). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சார்ந்த ஜோஸ்லின் பெனட் சிங் (30) என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஜோஸ்லின் பெனட்சிங் அறிவாளால் ராஜகுமாரை வெட்டினார். அத்துடன் அவர் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றார். இதில் காயமடைந்த ராஜகுமார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூதப்பாண்டி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் ஜோஸ்லின் பெனட் சிங் - க்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் முருகேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
Next Story