50 வருட காலத்திற்கு திமுகவை யாரும் அசைக்க முடியாது என ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசினார்.

X
50 வருட காலத்திற்கு திமுகவை யாரும் அசைக்க முடியாது என ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன், திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி, தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசும் போது, புதியதாக கட்சி தொடங்கியவர்கள் உடனடியாக முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்கள். கொள்கையை சொல்லி, அரசியலுக்கு வந்த காரணத்தை கூட சொல்லாமல் முதல்வராக நினைக்கிறார்கள். எம்ஜிஆர், சம்பத், வைகோ சென்ற போது கட்சி அழிந்து விடும் என கூறினார்கள். ஆனால் என்றைக்கும் நிலையாக இருக்கும் கட்சி திமுக. புதியதாக வந்தவர்கள் திமுகவை அழிப்பது கடமை என்கின்றனர். திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று நினைவிடத்தில் உள்ளார்கள். திமுக இருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் அனைவருக்கும் நினைவு மண்டபம் எழுப்பியவர் கலைஞர். 50 வருட காலத்திற்கு திமுகவை யாரும் அசைக்க முடியாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்ததுதான் வரலாறு. திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி பேசும் போது, உலகம் முழுவதும் தமிழ் வியாபித்து இருக்கிது என்றார் அது அண்ணா வழங்கிய இரு மொழி கொள்கை. இந்தி படிக்காத தமிழ்நாடு மருத்துவ துறையில் முதலிடத்தில் உள்ளது. போக்குவரத்து துறையில் இரண்டாமிடம். பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலத்தில் முதலிடம். உத்திர பிரதேசம் வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளது. தமிழ் நாடு இரண்டாம் இடம். இதை சாதித்தது திமுக. முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும். அனைத்து ஜாதி, மதம், மொழியினரும் திமுக ஆட்சியில் ஒற்றுமையாக உள்ளார்கள்.
Next Story

