50 கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்டனர்

50 கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்டனர்
திருச்செங்கோடு ஒன்றியம் டி. கைலாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் இவர் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். மோடி அரசின் ஹிந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கை யைஏற்காவிட்டால் கல்வி நிதி வழங்க மாட்டோம் என்ற அறிவிப்பு ஆகியவை பிடிக்காத நிலையில் கைலாசம் பாளையம் பகுதியை சேர்ந்த பதினைந்து பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உடன் பாஜகவில் இருந்து விலகிநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.முன்னதாக கெட் அவுட் மோடி வேண்டாம் வேண்டாம் என்று நினைப்பு வேண்டாம் புதிய கல்விக் கொள்கையை கைவிட என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிய படி தாங்கள் அணிந்திருந்த பாஜக துண்டை தூக்கி வீசி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன் மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் திருமலை எழுச்சி பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கமணிமுன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜிஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Next Story