ரூ.50 லட்சத்திற்கும் மேலாக ஆடுகள் விற்பனை.

மதுரை வாடிப்பட்டியில் ரூபாய் 50 லட்சத்திற்கும் மேலாக ஆடுகள் விற்பனையானது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில், ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இந்த சந்தைக்கு, மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 8 மணி வரை சந்தை செயல்படும். இதில், ஆடு மாடு கோழிகள் விற்பனை காலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிந்து விடும். இந்நிலையில், வரும் 7ந்தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு கிராமப் புறங்களில் இருந்து வெள்ளாடுகள் வந்திருந்தது. இந்த சந்தையில் ரூ.50 லட்சத்திற்கும் மேலாக விற்பனை நடைபெற்றது.
Next Story