50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி

50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி
X
வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் 1975 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்தித்துக் கொண்ட 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்கி மகிழ்ந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் என்.எஸ்.வி.வி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1974 -75 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இங்கு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பல்வேறு துறைகளில் பணியாற்றிய முன்னாள் மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர் தங்கள் படித்த வகுப்புகளை ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை நிகழ்ச்சிக்கு வரவழைத்து அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர் பின்னர் பள்ளி மாணவர்களிடையே நடந்த பொன்விழா நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகளை வழங்கியும் கௌரவப்படுத்தினர் பின்னர் அப்பள்ளியில் படிக்கும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்கிய முன்னாள் மாணவர்கள் அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு பணம் ஆகியவற்றை வழங்கி உற்சாகப்படுத்தினர் தங்களது 14 ஆவது வயதில் ஒரே வகுப்பில் குறும்புகளுடன் சந்தோசமாக தங்கள் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் தற்போது தங்களது 64வது வயதிலும் அதை உற்சாகத்துடன் ஒருவருக்கொருவர் சந்தோசமாக தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
Next Story