50 சதவீத மானியத்துடன் தக்கை பூண்டு விதைகள்.

X
சேடப்பட்டி வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தக்கை பூண்டு விதைகளை விதைத்து மடக்கி உழுவதை ஊக்கப்படுத்தும் விதமாக 50 சதவீத மானிய விலையில் தக்கைபூண்டு விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 800 மானியம் வழங்கப்படும். கோடை உழவு செய்வதால் கோடை மழையின் மூலம் பெரும் நீரானது நிலத்தின் அடிப்பகுதி வரை உறிஞ்சப்பட்டு மண்ணின் ஈரம் தக்க வைக்கும் என்பதால் இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.
Next Story

