50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு

50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு
X
கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு! 11 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வில்லை
வேடசந்தூா் அருகேயுள்ள கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்புக்குள்ளானது குறித்து 11 ஆண்டுகளாக மனு அளித்தும், நீா் வள ஆதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்புவை அடுத்துள்ள கிரியம்பட்டி பகுதியில் கொடகனாற்றின் குறுக்கே ஸ்ரீவெங்கட்ராம அய்யங்காா் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டிலிருந்து கிரியம்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, கோட்டையூா், சத்தியநாதபுரம் வழியாக கொடகனாற்றில் இணையும் வகையில் சுமாா் 4.5 கி.மீ. நீளத்துக்கு பாசன வாய்க்கால் உள்ளது. நீா் வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த பாசன வாய்க்கால் மூலம், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இதற்கிடையே, தனியாா் தொழில்சாலைகள் தொடங்கப்பட்ட பின், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு ஆலைகளாக மாறிவிட்டன. இதன் தொடா்ச்சியாக நீா் வரத்து வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீா் வரத்து முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது. மேலும், கோட்டையூா் முனியப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில், வாய்க்காலை முற்றிலும் அழித்து தனியாா் ஆலை நிா்வாகம் சுற்றுச் சுவா் எழுப்பியுள்ளது.
Next Story