50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்னிணைப்பு வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்ததை மாவட்ட வாரிய இலக்கீடு ஒதுக்கி உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்னிணைப்பு வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்ததை மாவட்ட வாரிய இலக்கீடு ஒதுக்கி உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்.என பெரம்பலூரில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மேகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விவசாயிகள் 2025-2026ஆம் ஆண்டுக்கு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்து பல மாதங்களாகியும் இதுவரை மாவட்ட வாரிய இலக்கீடு ஒதுக்கவில்லை. எனவே மாவட்ட வாரியாக இலக்கீடு ஒதுக்கீடு செய்து சாதாரண முன்னுரிமையில் தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனே மின்னிணைப்பு கொடுக்க நடவடிக்கை வேண்டும். 2024-2025ம் ஆண்டு முடிய பதிவு செய்து காத்திருக்கும் 5969 விவசாயிகளுக்கும் உடனே மின்னிணைப்பு வழங்க வேண்டும். சாதாரண முறையில் இலவச மின்னிணைப்பை கொடுப்பதில் இலவசம் என்பதற்கு பதிலாக மின்னிணைப்பு கொடுக்க ஆகும் செலவினங்களை மின்நுகர்வோர்கள் ஏற்றுக் கொள்ளும் திட்டங்களுக்கு மட்டும் தான் இலவச மின்னிணைப்பு தருவதென்ற அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் வழங்கினர்.
Next Story