திமுக சார்பில் 50 லட்சம் கையெழுத்து கடிதம்

தேனி அருகே வீரபாண்டியில் நான் நீட்டை எதிர்க்கிறேன் 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது . தேனி வடக்குமாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமாகிய பொன் முத்துராமலிங்கம் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

அதனை தொடர்ந்து பள்ள மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி , பேச்சு போட்டி ஆகியவை நடைபெற்றது . மேலும் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் , வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி ஒன்றிய செயலாளர்கள் ரத்தினசபாபதி ,சக்கரவர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்

Next Story