காலணிக்குள் இருந்த 50 லட்சம் மதிப்புள்ள தங்கம்
காலணிக்குள் இருந்த 50 லட்சம் மதிப்புள்ள தங்கம்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி காலணிக்குள் இருந்த தங்கம் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து திருச்சி வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வான் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு ஆண் பயணியை சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த காலணியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. 50 லட்சத்து 8 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள 797.500 கிராம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story