நூல்களுக்கு 50% சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கம்

நூல்களுக்கு 50% சிறப்புத் தள்ளுபடி  விற்பனை துவக்கம்

தஞ்சாவூரில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நூல்களுக்கு 50% சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.


தஞ்சாவூரில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நூல்களுக்கு 50% சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, 2024 ஏப்ரல் 15ஆம் நாள் முதல் மே 14ஆம் நாள் வரை ஒருமாத காலத்திற்குத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டு நூல்கள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் துவககி வைத்தார். இவ்விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர்(பொ) முனைவர் சி.தியாகராஜன், பல்கலைக்கழக நிதியலுவல் ம.கிருஷ்ணமூர்த்தி, பதிப்புத்துறை இயக்குநர் (பொ) கோ.பன்னீர்செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன், பதிப்புத்துறை சரக்கரையர் மற்றும் விற்பனையாளர் மூ.ரமேஷ் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர். அறிஞர் பெருமக்களும், மாணவர்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார். நூல்கள் கிடைக்குமிடம்: பதிப்புத்துறை விற்பனைப் பிரிவு, வாகை வளாகம் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் – 613010 கைபேசி எண்: +91 – 9489102276 மின்னஞ்சல் : tupublicationsdept@gmail.com

Tags

Next Story