500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்..
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் ஊராட்சியில் எலங்குடி, ஆலங்குடி, ஓச்சேரி,தென்கால் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாயம் ,100 நாள் வேலை திட்டம் பறிபோகும், வரி உயரும் உள்ளிட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு அம்மையப்பன் ஊராட்சியை திருவாரூர் நகராட்சியோடு இணைக்ககூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியாக வந்து பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பான மனுவை வழங்கினர். தங்களது கிராமத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த முடிவை அரசு கைவிடும் வரை இந்த போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
Next Story



