500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மின் அலங்காரத்துடன் சுவாமி நகர்வலம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது தேனி அருகே அல்லிநகரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடக்கும் சித்திரை 1-ந்தேதி நடக்கும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்காக கடந்த 29-ந்தேதி கோவிலில் கொடியேற்றம் நடந்தது தொடர்ந்து இன்று சாமி புறப்பாடு நடைபெற்றது அல்லிநகரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலில் இருந்து பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சோலைமலை அய்யனார் கோவிலுக்கு வீரப்ப அய்யனார் சுவாமி மின் அலங்காரத்துடன் புறப்பட்டு, பக்தர்கள் ஊர்வலமாக தேனியில் முக்கிய சாலைகள் வழியாக சென்றனர். 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். வழி நெடியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை அல்லிநகரத்தில் இருந்து குதிரை வாகனத்தில் புஷ்ப அலங்காரத்துடன் வீரப்ப அய்யனார் எழுந்தருளி மலைக்கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும், நாளை இரவு புஷ்ப அலங்காரத்துடனும் மின்னலங்காரத்துடனும் சுவாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Next Story




