500 மீட்டர் தொலைவில் இருந்து போராடும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது- முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிவகாசியில் பேட்டி....

500 மீட்டர் தொலைவில் இருந்து போராடும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது- முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிவகாசியில் பேட்டி....
X
500 மீட்டர் தொலைவில் இருந்து போராடும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது- முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிவகாசியில் பேட்டி....
500 மீட்டர் தொலைவில் இருந்து போராடும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது- முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிவகாசியில் பேட்டி.... சிவகாசியில் உள்ள தனியார்(ஸ்ரீ காளீஸ்வரி) கல்லூரியில் தமிழ்நாடு வானியல் விண்வெளி ஆராய்ச்சி கழகம் பெங்களூரு, இந்திய வானியல் நிறுவனம் சென்னை, தமிழ்நாடு கணித அறிவியல் நிறுவனம்,தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகம்,ராமன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில் மாநில அளவிலான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் 3 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருமிருந்து 600 க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி ஆய்வு மாணவ,மாணவிகளும் வானியல் விஞ்ஞானிகள் பலரும் கலந்துகொண்டனர். நிறைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை அறிவியல் மாநாட்டில் நடைபெற்ற ஈ கன்டென்ட் டெவலப் மென்ட், சிறந்த ஆய்வு கட்டுரை மற்றும் சிறந்த குறும்படம், சிறந்த படைப்பாற்றல், சிறந்த அறிக்கை தயாரிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் 4ல் மனிதர் செல்லும் திட்டமில்லை, ஆளில்லா விண்களமாக திட்டமிடப்பட்டுள்ளது, ககன்யான் விண்கலத்தில் மனிதர் அரசு மட்டுமே அறிவியல் ஊக்கத்தை கொடுக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது, அரசுத் துறையை தாண்டி தனியார் துறைகளின் பங்களிப்பு 70 சதவீதம் அளவிற்கு உள்ளது. அனைத்து துறைகளிலும் தனியார் துறையின் பங்களிப்பு உள்ளது போல ஆராய்ச்சி துறையிலும் தனியாரின் பங்களிப்பு தேவை அவசியமாகிறது விண்வெளி ஆராய்ச்சியை பொருத்தவரை இந்தியா என்றைக்கும் நான்காவது இடத்திற்கு கீழ் செல்லப்போவதில்லை மனிதனை மட்டும் நாம் இதுவரை விண்ணிற்கு அனுப்பியதில்லை என்பதில் மட்டும் நாம் பின்தங்கியுள்ளோம் செயற்கைக்கோள்களை மிகக் குறைந்த செலவில் வெற்றி அடைந்ததில் நம் நாடு இரண்டு, மூன்றாவது இடத்திற்குள் உள்ளது. இளம் தலைமுறைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராக உள்ளார்கள், ஆண் பெண் சரிசமமாக வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தயாராக உள்ளார்கள் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த மயில்சாமி அண்ணாதுரை, தேவையான கட்டுமானங்கள் அங்கு உருவாக்கப்பட வேண்டும், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை தென் தமிழகம் உருவாக்கும் தற்போதைய அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக மனிதனுக்கு மனிதன் எதிர்த்து நின்று போராட வேண்டிய தேவை இருக்காது, 500 மீட்டர் தொலைவில் நின்று போராட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது, எனவே அதற்கு ஏற்றவாறு அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார். முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய இந்திய ராணுவ தலைமை விஞானி டில்லி பாபு விஜயகுமார், ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உள்ளன, இதில் 7 நாடுகளிடம் மட்டுமே நவீன போர் விமானத்தை உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் உள்ளது அந்த 7 நாடுகளில் நமது பாரதமும் ஒன்று, உலகத்தில் 6 நாடுகளிடம் மட்டுமே அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர் மூழ்கி தொழில்நுட்பம் உள்ளது அந்த 6 நாடுகளில் நாமும் ஒன்று, உலகில் 5 நாடுகளிடம் மட்டும்தான் நவீன பாரஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளது, அந்த 5 நாடுகளிலும் நமது பாரதமும் ஒன்று, உலகத்தில் நான்கு நாடுகள் தான் நிலவில் மிருதுவாக தரையிறங்கி உள்ளது அதிலும் பாரதமும் ஒன்று, மிக வேகமாக பறக்கக்கூடிய மிகை வேக ஏவுகணை தொழில்நுட்பத்தில் "ப்ரமோஸ்" என்ற ஏவுகணையை உருவாக்கி போர்ப்படையில் சேர்த்துள்ள இரு நாடுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் மட்டுமே உள்ளது, இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட அந்த தேசத்து யுகதிகளாகிய நீங்கள் யோசனைகளை விட்டுவிடாமல் தொடர்ந்து செயலாற்றி களமாடி பல்வேறு தளங்களில் படைப்புகளை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்
Next Story