500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை

X
தூத்துக்குடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் நாணயத்தால் அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர், பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட விநாயகர் என மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாடு
தூத்துக்குடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் நாணயத்தால் அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர், பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட விநாயகர் என மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் காசு கடை பஜார் பகுதியில் முத்து விநாயகருக்கு ஒரு ரூபாய் நோட்டு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் என 1008 ரூபாயால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போன்று தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு பகுதியில் பசுவின் சாணத்தை கொண்டு சுமார் 4 அடி உயர விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. தபசு மண்டப பகுதியில் ஐந்து முக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதேபோன்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது . தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் இரண்டு அடி முதல் 10 அடி வரையிலான சுமார் 500 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story

