500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்
சங்கராபுரம் அருகே கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம், விவசாயிகள் கவலை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக்காற்றுடன் கூடிய பலத்த மழை பொய்தது, மலை அடிவாரப் பகுதிகளான தெத்துக்காடு,மோட்டாம்பட்டி, பாச்சேரி, பாலப்பட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுஇருந்த மக்காச்சோளம் பயிர்கள் முற்றிலும் சாய்ந்து வீணாகி உள்ளது, இதில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்ட நிலையில்,பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர்களை அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.