ஊதியூரில் மூட்டை மூட்டையாக பிடிபட்ட 500கிலோ குட்கா

ஊதியூரில் மூட்டை மூட்டையாக பிடிபட்ட 500கிலோ குட்கா
குட்கா பதுகியவர்
ஊதியூரில் மூட்டை மூட்டையாக பிடிபட்ட 500கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சமீப காலமாக அரசு தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருபவர்களை போலிசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருப்பூரில் இருந்து அனைத்து காவல் நிலையத்திற்கும் குட்கா எடுத்து செல்ல படுவதாக ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருப்பூர் காங்கேயம் சாலையில் குட்கா மூட்டைகளை எடுத்த வந்த வெளிமாநில எண்ணுடைய காரை காங்கேயம் அடுத்துள்ள ஊதியூர் காவல் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசார் காரை நிறுத்திய போது நிற்காமல் தாராபுரம் நோக்கி அதிவேகமாக சென்றது.

இதனை அடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காவல் ஆய்வாளர் விவேகானந்தன், உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் விடாமல் பின்னால் விரட்டி சென்று கைது செய்தனர். இதனை அடுத்து போலிசார் விசாரித்ததில் கைதானவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் வயது 24 என்பதும் பெங்களூரில் இருந்து பழனிக்கு 500 கிலோ குட்கா மூட்டையை காரில் எடுத்து சென்றதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலிசார் தொடர்ந்து கைதானவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story