ரூ.50000 சம்பளத்தில் வேலை - ஆட்சியர் தகவல்
Dindigul King 24x7 |15 Jan 2025 3:26 AM GMT
இளம் தொழில் வல்லுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலகிற்காக இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலகில் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வுச் செய்தல், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்க காட்சிகள், கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பதவிக்கு பணியாற்றிட கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் (Data Science) மற்றும் புள்ளியியல் படிப்பில் இளங்கலை பட்டம் அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மாநில அரசின் பணியாளர் தேர்வு விதிமுறையின் அடிப்படையில் இளம் தொழில் வல்லுநர் (Young Professional) நியமனம் நடைபெறுகிறது. மேற்படி தகுதியுள்ள இளம் தொழில் வல்லுநருக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 23.01.2025 அன்றைய தேதிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை புள்ளிஇயல் துணை இயக்குநர், மாவட்டப் புள்ளிஇயல் அலுவலகம், அறை எண்.228. 2வது தளம், V.N. வளாகம், திண்டுக்கல் - 624004. என்ற முகவரிக்கு நேரிலோ/தபால் மூலமாக அனுப்பவும், விரிவான அறிக்கை விவரங்களை திண்டுக்கல் மாவட்ட இணையதள முகவரி https://dindigul.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story