சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 5,031 பேர் தபால் ஓட்டுகள்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 5,031 பேர் தபால் ஓட்டுகள்

 சேலம் நாடாளுமன்ற தொகுதியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5,031 பேர் தபால் ஓட்டுகள் பெறப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.  

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5,031 பேர் தபால் ஓட்டுகள் பெறப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5,031 பேர் தபால் ஓட்டுப்போட்டு் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தலில் நேரடியாக வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கனவே படிவம் 12-டி வழங்கப்பட்டு தபால் ஓட்டுப்போடுவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 50 ஆயிரத்து 718 பேர் உள்ளனர். கடந்த 23-ந் தேதி வரை 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான படிவம் பெறப்பட்டது. குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 3,262 முதியவர்களும், 1,918 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,180 வாக்காளர்கள் தபால் ஓட்டுப்போட தகுதியுள்ளவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு கடந்த 5-ந் தேதி சட்டசபை தொகுதி வாரியாக தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பெறும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினத்துடன் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டுப்பதிவு முடிந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,031 பேர் வாக்களித்துள்ளனர் என்றும் 149 பேர் வாக்களிக்க வில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story