52வது வார்டில் உடைப்பு ஏற்பட்டு வீணாக செல்லும் தண்ணீர்

X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி சாலையில் ஆவின் பாலகத்திற்கு செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிகமான தண்ணீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடந்த மாதமும் இதேபோல் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தண்ணீர் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
Next Story

