ரூ.52.11 கோடியில் கடனுதவி

ரூ.52.11 கோடியில் கடனுதவி
X
கடனுதவி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 530 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.52.11 கோடியில் கடனுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் துணை முதல்வர் உதயநிதி மாநில அளவிலான மணிமேகலை விருது மற்றும் வங்கிக்கடன் வழங்கினார்.இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள மொத்தம் 530 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.52.11 கோடி மதிப்பீட்டில் வங்கி நேரடிக் கடன், பெருங்கடன், நுண் நிறுவனக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
Next Story