பொங்கல் பரிசுக்காக 5.27 லட்சம் கரும்புகள்

பொங்கல் பரிசுக்காக 5.27 லட்சம் கரும்புகள்

கரும்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளுக்காக  தேனி மாவட்டத்தில் இருந்து 5.27 லட்சம் கரும்புகள் லாரி மூலம் கொண்டு வரப்பட்டன. 
பொங்கல் பண்டிகைக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று 7-ந் தேதி முதல் டோக்கன் வினியோகிக்கும் பணி துவங்கியது. 10-ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களில் மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 561 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு வினியோகிப்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து 5.27 லட்சம் கரும்புகள் லாரி மூலம் நேற்று தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டன. இவை அனைத்தும் தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள கூட்டுறவு அச்சகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் முரளி கண்ணா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story