53 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு – மாநகராட்சி நடவடிக்கை!

தனிநபர்களுக்கு விற்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம் நீதிமன்றம் மூலம் மாநகராட்சி மீட்பு.
கோவை மாநகராட்சி, போத்தனூர் கருணாநிதி நகரில் 1972-ல் ஒப்புதல் பெற்ற 4.47 ஏக்கர் நிலத்தில் பொதுப்பயன்பாட்டிற்காக 42 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இடங்களை உரிய முறையில் ஒப்படைக்காமல், சிலர் முறைகேடாக தனிநபர்களுக்கு விற்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து 2023-ல் சென்னை உயர்நீதிமன்றம் அந்த நிலம் மாநகராட்சிக்கே சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள கட்டிடம் அண்மையில் இடிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையரின் உத்தரவில், உதவி நகரமைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணிப்பில், JCB எந்திரங்களால் கட்டிடம் அகற்றப்பட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்பட்டு, பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story