கன்னியாகுமரியில் ரயில் மறியலுக்கு முயன்ற 53 பேர் கைது

கன்னியாகுமரியில் ரயில் மறியலுக்கு முயன்ற 53 பேர் கைது
மறியலுக்கு முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்
டெல்லி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.விவசாயிகளுக்கு ஆதரவாக

கன்னியாகுமரி மாவட்ட பாசனத்துறை, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் , டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் ரயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்றுகாலையில் இருந்து கன்னியாகுமரி ரயில் நிலையம், மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்போது ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக வாகனங்களில் குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் குமரி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து உட்பட பலர் கன்னியாகுமரி ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்களை போலீஸார் ரயில் நிலையம் செல்வதற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மொத்தம் 41 பெண்கள் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீஸாருக்கும், போராட்ட குழுவினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கன்னியாகுமரியில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags

Next Story