பேராவூரணி தொகுதியில் ரூ.5.48 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நபார்டு (2023-24) திட்டத்தின் கீழ் மணக்காடு - மங்களநாடு இணைப்பு சாலையில் மருதங்குடியாற்றின் குறுக்கே ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரம் தேவர் குடியிருப்பில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு ஊமத்தநாடு ஊராட்சி, கைவனவயல் காமராஜ் நகரில் ரூ.12.90 லட்சம் மதிப்பீட்டில், மயானச் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.5.48 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவரும், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளருமான மு.கி.முத்துமாணிக்கம், தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோ. நாகேந்திரன், சு.சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மணக்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருணாச்சலம் மண்கொண்டார், நாகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் உறுப்பினர்கள் அழகுமீனா தங்கப்பன், வி.சுதாகர், குழ.செ.அருள்நம்பி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் விஜயகுமார் (மணக்காடு), ஏ.ஆர்.பாலு (குப்பத்தேவன்), முரளி (திருவத்தேவன்) கிளைச் செயலாளர்கள் முருகேஷ் (மணக்காடு), தசரதன் (குப்பத்தேவன்), இளைஞர் அணி ராமமூர்த்தி, வழக்குரைஞர் வீ.கருப்பையா, ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் ஆர்.ஜி.சுரேஷ், கிராமத் தலைவர்கள் செல்வம் மூர்த்தி (செல்லப்பிள்ளையார் கோயில்), ஆனந்தன் (குப்பத்தேவன்), தமிழரசன் (திருவள்ளுவர் நகர்), கணேசபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.எம்.பத்மநாதன், அரசு ஒப்பந்ததாரர் முத்துக்குமார், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.