55 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த18 பேருக்கு வனத்துறை 'நோட்டீஸ்

55 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த18 பேருக்கு வனத்துறை நோட்டீஸ்
நோட்டீஸ்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி, எடப்பாடி மலை கிராம வனப்பகுதி, காப்புக்காடாக உள்ளது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, விவசாய நிலமாகவும், குடி சைகள் அமைத்தும் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கெங்கவல்லி வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் ஆக் கிரமிப்பாளராக கண்டறியப்பட்ட, 18 பேருக்கு, காப்புக்காட்டில் இருந்து வெளியேற அறிவுறுத்தி, கெங்கவல்லி வனத்துறையினர் நேற்று 'நோட்டீஸ்' வழங்கினர்.இதுகுறித்து வனச்சரகர் சிவக்குமார் கூறுகையில், “எடப் பாடி காப்புக்காட்டில் முதல் கட்ட ஆய்வில், 55 ஏக்கர் நிலத்தை, 18 பேர் ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது. அவர்கள், 15 நாளில் வெளியேற, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது," என்றார்.
Next Story