கீழவெண்மனையில் 55ஆம் ஆண்டு தியாகிஙகள் தினம் அனுசரிப்பு
ஸ்துபிக்கு வீரவணக்கம் செலுத்திய சிபிஎம் கட்சியினர்
நாகைமாவட்டம் கீழ்வேளூர் அருகே கிழவெண்மணி கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கூலி உயர்வு கேட்டு விவசாய தொழிலாளர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அப்போது பெண்கள். குழந்தைகள் உள்பட 44பேர் ஒரே குடிசையில் அடைத்து வைக்கப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கூலி உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி 55-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு ஸ்தூபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், சி.ஐ.டியு. மாநில தலைவிர் சவுந்தராஜன், விவசாய தொழிலளர் சங்க மாநில தலைவர் லாசர், மாவட்ட செயலாளர்கள் நாகை மாரிமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னதுரை, பழனிச்சாமி, மாநில குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சண்முகம், விவசாய சங்க மாநில துணைத் தலைவர் அப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.