ரெப்கோ வங்கியின் 56 வது நிறுவன நாளை முன்னிட்டு 56,000 மரக்கன்று !!
ரெப்கோ வங்கியின் 56 வது நிறுவன நாளை முன்னிட்டு, வங்கி சார்பாக 56,000 மரக்கன்றுகளை தென்னிந்திய அளவில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்தாக ' தாயின் பெயரில் ஒரு மரம் (EK Ped Maa Ke Naam) என்னும் வாசகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய தீர்மானித்துள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக, ரேப்கோ வங்கி, திருச்செங்கோடு கிளையின் சார்பாக இன்று (19.11.2024) திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டம்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மாரிமுத்து, ரெப்கோ வங்கி, திருச்செங்கோடு கிளையின் முதன்மை மேலாளர் மகேஷ் பிரபு, உதவி மேலாளர் வெங்கடாசலம் மற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ரெப்கோ வங்கியின் 56வது நிறுவன நாளை முன்னிட்டு 'ரெப்கோ 56' என்னும் வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, அத்திட்டத்தில் மூத்த குடி மக்களுக்கு 8.75% மற்றவர்களுக்கு 8.25% வழங்கப்படுகிறது. மேலும் தங்க நகைக்கடன் கிராமிற்கு அதிகபட்சமாக ரூ5500/- வரை வழங்கப்படுகிறது மற்றும் அசையா சொத்தின் பெயரில் அடமானக் கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது என்பதை முதன்மை மேலாளர் தெரிவித்தார்.