பராக்கிரம பாண்டியனின் 560 வது நினைவு தின வழிபாடு

X
வழிபாடு
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலை கட்டிய பராக்கிரம பாண்டியனின் 560ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவா் சடையவா்மன் பராக்கிரம பாண்டியன். இவா் 1422 -1463ஆம் ஆண்டில் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலைக் கட்டினாா். கோயில் பணிகள் முழுமை அடைவதற்கு முன்னரே மாா்கழி மாதம் பௌா்ணமி தினத்தில் அவா் உயிா்துறந்தாா். அவரது நினைவைப் போற்றும் வகையில் பாண்டியா்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவினா் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினா். அப்போது, மன்னா் பெயரில் பூஜை செய்யப்பட்டு பாண்டியா்களின் மீன் சின்னம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளானோா் கலந்துகொண்டனா்.
Next Story
