வந்தவாசியில் 56 -வது தேசிய நூலக வார விழா - வட்டாட்சியர் பங்கேற்பு
புத்தக வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை நூலகத்தில் நடைபெற்ற 56 ஆவது தேசிய நூலக வார விழாவில் பாவலர் ப. குப்பன் எழுதிய ’இன்று ஓர் இன்னுரை’நூல் அறிமுகம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து 56 ஆவது தேசிய நூலக வார விழாவை கிளை நூலகத்தில் நடத்தியது. இந்த நிகழ்விற்கு நூலகர் ஜோதி தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் எஸ். வீரராகவன், ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் ஜீனத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக,வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி பங்கேற்று, புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். மேலும் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப. குப்பன் எழுதிய 'இன்று ஓர் இன்னுரை’ நூலைப் பற்றி பூங்குயில் சிவக்குமார், கவிஞர் தமிழ்ராசா ஆகியோர் அறிமுகவுரை வழங்கினர். ஜோதிடர் சதானந்தன், வழக்கறிஞர் மணி, சமூக ஆர்வலர் விஜயகுமார், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் பிரபாகரன், கலாம் பவுண்டேசன் கேசவராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் பாவலர் ப. குப்பன் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியில் நூலக அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Next Story