57 கிலோ போதைப்பொருள் மற்றும் 2 இருசக்கர வாகனம் பறிமுதல் இருவர் கைது
கைது
எடப்பாடி அருகே 80 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், பான் பராக் போதை பொருள் மூட்டைகளை எடப்பாடி போலீசார் பறிமுதல் செய்தனர்
எடப்பாடி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 80 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் பான் மசாலா விற்பனை செய்ய இரண்டு இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த இருவரை எடப்பாடி போலீசார் கைது செய்ததோடு தப்பி ஓடிய மேலும் இருவரை தேடி வருகின்ற இச்சம்பவத்தால் பரபரப்பு.... சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி செல்லும் பிரதான சாலையில் எடப்பாடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மூட்டைகளுடன் தலா இருவருடன் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான் மசாலா போன்ற புகையிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக சங்ககிரியை சேர்ந்த அருள்குமார், எடப்பாடியை சேர்ந்த பாலமுருகன், புருஷோத்தமன், சண்முகம் ஆகிய நான்கு பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது புருஷோத்தமன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து அருள்குமார், பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனம் மற்றும் சுமார் 80 ஆயிரம் மதிப்புள்ள 57 கிலோ ஹான்ஸ், பான்மசாலா போன்ற புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்ததோடு மேலும் தப்பி ஓடிய இருவரை தீவிரமாக தேடி வருகின்ற இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story