காணாமல் போன 577 செல்போன்கள் மீட்பு
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ்கணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளர் வசந்தி, உதவி ஆய்வாளர் மற்றும் சைபர் கிரைம் காவலர்களின் தீவிர முயற்சியால் தென்காசி சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த நபர்களின் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 316 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.
முடக்கம் செய்யப்பட்ட தொகை ரூ.13,77,15,099ஆகும். அதில் பாதிக்கப்பட்ட 48 நபர்களுக்கு பணம் மொத்தம் ரூ.62,22,194 ஆகும். மீட்கப்பட்ட மற்றும் காணாமல் போன விலை உயர்ந்த 65 எண்ணிக்கை யுள்ள ரூ.11,70,000 மதிப்பு உள்ள செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேற்று உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். மீதம் உள்ள தொகையை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிடைக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக இதுவரை 577 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. மேலும் சைபர் கிரைம் மூலம் பணம் இழந்த நபர்களுக்கு பணத்தை மீட்டு எடுக்கவும் அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.