இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.56 கோடியில் 58 வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.56 கோடியில் 58 வீடுகள்

வீட்டின் சாவிகளை வழங்கிய அமைச்சர்கள் 

அரிமளம் அருகே தேக்காட்டூர் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில் ரூ.3.56 கோடியில் கட்டப்பட்ட 58 வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகள் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளை வழங்கினார்கள். இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை இயக்குநர் (அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை) கே.ரமேஷ், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story