கன்னியாகுமரி: கோவில் தெப்பக்குளத்தில் ஆண் பிணம்

கன்னியாகுமரி: கோவில் தெப்பக்குளத்தில் ஆண் பிணம்

கோப்பு படம்

குமரி அருகே இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயிலில் உள்ள தெப்பகுளத்தில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதந்ததை கண்ட மக்கள் அச்சமடைந்தனர்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான சக்கரதீர்த்த காசி விசுவநாதர் கோவிலும், அதன் முன்பு சக்கரதீர்த்த குளமும் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனே கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத்துறை உதவியுடன் குளத்தில் மிதந்த பணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பிணமாக மிதந்தவருக்கு சுமார் 58 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணை இறந்தவர் கடந்த சில மாதங்களாக அங்குள்ள கடைகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story