588 மதிப்பெண் பெற்று அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவி முதலிடம்

கோவை அரசு உதவி பெறும் பிரசன்டேஷன் பள்ளியில் 588 மதிப்பெண்களை ஏஞ்சல் ஹன்னா என்ற மாணவி பிளஸ் 2வில் முதலிடம் பிடித்துள்ளார்.

கோவை:பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவை அரசு உதவி பெறும் பள்ளியான பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் 588 மதிப்பெண்களை ஏஞ்சல் ஹன்னா என்ற மாணவி பெற்றுள்ளார்.இவர் காமர்ஸ் பாடப் படிப்பில் 100 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப் படிப்பில் 100 மதிப்பெண்களும், ஆங்கிலபாடத்தில் 99 மதிப்பெண்கள் உட்பட மொத்தம் 588 மதிப்பெண்கள் பெற்றுளளார்.பள்ளி வளாகத்தில் மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்துடன் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இரண்டு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆங்கிலம் பாடத்தில் 99 மதிப்பெண்களும்,தமிழில் 95 மதிப்பெண்களும் எடுத்து இருப்பதாக தெரிவத்த மாணவி சி.ஏ படிப்பது தனது லட்சியம் எனவும் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story