ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருகோவில் 58வது ஆண்டு உற்சவ பெருவிழா

500க்கும் மேற்பட்ட தாய்மார்கள், பெரியோர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன்
மதுரை தெற்குவெளி வீதி 22 காஜா தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருகோவில் 58வது ஆண்டு உற்சவ பெருவிழா முதல் நாள் நிகழ்ச்சியாக வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தல், அழகு குத்துதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட தாய்மார்கள், பெரியோர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர், எடுத்துவரப்பட்ட பால்குடம் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது, இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை விழா குழு தலைவர் தங்கவேல் ஆச்சாரி, துணைத் தலைவர் அண்ணாமலை ஆச்சாரி, செயலாளர் ஜெயகிருஷ்ணன் ஆச்சாரி, துணைச் செயலாளர் சந்தனமாரி ஆச்சாரி, பொருளாளர் ராஜா ஆச்சாரி, துணை பொருளாளர் ராஜேஷ் ஆச்சாரி, பெட்டி பூசாரி மாரிமுத்து ஆச்சாரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்,

Tags

Read MoreRead Less
Next Story