59 புதிய பேருந்து சேவையை அமைச்சர் துவக்கி வைத்தார்
Dindigul King 24x7 |21 Aug 2024 6:45 PM GMT
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 59 புதிய பேருந்து சேவையை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
மலை கிராமங்களில் 10 குடும்பங்கள் வசிக்கக் கூடிய பகுதியாக இருந்தாலும் அங்கு தமிழக அரசு சாலைகள் அமைத்து கொடுத்து வருகிறது. கொடைக்கானல் வெள்ள கவி பகுதிக்கு விரைவில் சாலை அமைக்கப்படும் அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மண்டலத்திற்கு 5 நகர்ப்புற பேருந்துகளையும், 53 புதிய புறநகர் பேருந்துகளையும், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய வழித்தடத்தில் ஒரு பேருந்து என 59 புதிய பேருந்து சேவையினை விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சச்சிதானந்தம், தங்கத்தமிழ்செல்வன், எம்எல்ஏக்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன், மகாராஜன், சரவணக்குமார், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மதுரை மண்டல மேலாண் இயக்குநர் சிங்காரவேலன், திண்டுக்கல் பொதுமேலாளர் சசிகுமார், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story