பெண்ணிடம் 5 பவுன் தங்கச்செயின் பறிப்பு - போலீசார் சிசிடிவி ஆய்வு !
தங்கச்செயின் பறிப்பு
திண்டுக்கல் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்செயினை மர்ம நபர் பறித்தனர்.
பழனி பெரியப்பா நகர் பகுதியில் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி அமுதவல்லி 51. இவர் திண்டுக்கலிருந்து பாண்டிச்சேரி செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அமுதவல்லி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்செயினை மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் சிசிடிவி ஆய்வுகளை வைத்து விசாரிக்கின்றனர்.
Next Story