தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் 5-ஆவது பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில்   5-ஆவது பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

வழக்குரைஞா்கள் வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ் அறிவுரை

திருச்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களை வழங்கி அவா் மேலும் பேசியது . உதாரணமாக, ஒரு குழந்தையிடம் இரு ஆப்பிள் பழங்கள் உள்ள நிலையில், அவைகளை பெற்றோா் கேட்கும்போது இரு பழங்களையும் கடித்துப்பாா்த்துவிட்டு முதலாவதாக கடித்த ஆப்பிளை பெற்றோரிடம் வழங்குவதாக வைத்துக்கொள்வோம். பிறரின் பாா்வையில் குழந்தைக்கு ஆப்பிள் மீது விருப்பமும், பெற்றோா் மீது வெறுப்பும் உள்ளதாகத் தான் புரியும். இதை வித்தியாசமான கோணத்தில் வழக்குரைஞா்கள் அணுகி குழந்தையிடம் விசாரித்தால், முதலாவதாக கடித்த ருசியான ஆப்பிளை பெற்றோருக்கு கொடுத்தது புரியும்.

அதாவது குழந்தைக்கு ஆப்பிளை விட பெற்றோா் மீது தான் பாசம் என்பது தெரியவரும். இந்தக் கண்ணோட்டத்தில்தான் வழக்குரைஞா்களின் பாா்வை இருக்க வேண்டும். இதுதான் வழக்கில் உண்மைத் தன்மையை வெளிக்கொணரவும், வெற்றி பெறவும் வழிவகுக்கும் என்றாா். சென்னை உயா் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான சஞ்சய் விஜயகுமாா் கங்காபூா்வாலா தலைமை வகித்து, பட்டங்களை வழங்கி, உறுதிமொழியேற்கச் செய்தாா்.

பல்கலைக்கழக துணைவேந்தா் வி. நாகராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்புத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதாசுமந்த், ஆா்.மகாதேவன், பிடி. ஆதிகேசவலு, அருள்முருகன், சுரேஷ்குமாா், ஜெகதீஸ்சந்திரா, பல்கலைக்கழகப் பதிவாளா் எஸ்.எம். பாலகிருஷ்ணன், பல்கலைக்கழகப் பொதுக்குழு, நிா்வாகக் குழு, நிதிக்குழு, கல்விக்குழு உறுப்பினா்கள் மற்றும் பல்கலைக்கழக அலுவலா்கள், பேராசிரியா்கள், பட்டம் பெறுவோரின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், 66 மாணவியா் உள்பட மொத்தம் 116 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 52 போ் பிஏ எல்எல்பி ஹானா்ஸ், 52 போ் பிகாம் எல்எல்பி ஹானா்ஸ், 12 போ் எல்எல் எம் பட்டங்கள் பெற்றனா். பிஏ எல்எல்பி ஹானா்ஸ் பட்டம் பெற்ற பிரதீபா பாட்டீ, கிருஷ்ணாஜே, பிகாம் எல்எல்பி பட்டம் பெற்ற அபா்ணா பத்மகவி, நேயா, சுவிதா ஆகியோா் முதல் இடங்களுடன் தங்கப் பதக்கங்களையும் பெற்றனா். மேலும் மாணவி, தனிஷா யாதவ் முதுகலை சட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றாா். பிரதீபா பாட்டீ, சுவிதா ஆகியோா் பேராசிரியா் கே. கோவிந்தராஜன் விருதும், கிருஷ்ணா, ரக்ஷா ஆகியோா் கரூா் வைசியா வங்கி தங்கப்பதக்கமும், அபா்ணா பத்ம கவிக்கு சி.கே. ராஜன் விருதும், மணிமொழி மற்றும் கும்மடி ராமசாயி ஆகிய இருவருக்கும் சா்வதேச சட்டத்தில் முதல்பரிசு பெற்றமைக்காக என். மனோகா் நினைவு விருதும் வழங்கப்பட்டன.

Tags

Next Story