பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 5வது நாள் உண்ணாவிரத போராட்டம்

பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 5வது நாள் உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நாகை பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 5-வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நாகை பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 5-வது நாள் உண்ணாவிரத போராட்டம் நாகூர் அருகே பனங்குடி சி.பி.சி.எல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளர்கள்,

சாகுபடிதாரர்கள், விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு மத்திய நில எடுப்பு சட்டத்தின் படி வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சி.பி.சி.எல். நிறுவனம் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும்.

மூன்று கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். இந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட முட்டம்,

சிறுநங்கை கிராமங்களில் விவசாய கூலித்தொழிலாளர்களையும் கணக்கெடுத்து அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில உரிமையாளர்கள், குத்தகைத்தாரர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் 5-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story