6அடி நீளம் அரிவாள் மீது ஏறி தலையில் கரகம் சுமந்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம்
Sivagangai King 24x7 |16 Aug 2024 3:45 AM GMT
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆறடி நீளம் அருவாள் மீது ஏறி தலையில் கரகம் சுமந்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தது அனைவரையும் வியப்புக்குள்ளாகியது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி கீழத்தெருவில் உள்ள மழுவெந்தி கருப்பசாமி கோவில் ஆடி களரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் மழுவெந்தி கருப்பசாமி 25 ஆம் ஆண்டு ஆடிப்படையலை முன்னிட்டு பிரான்மலை அருகே உள்ள மேலப்பட்டி சேவை பெருமாள் ஆலயத்திற்கு முன்பு உள்ள ஆற்றில் தீர்த்தம் எடுத்து கருப்பசாமி அரிவாள் மீது ஏறிய சாமியாடியை மேலப்பட்டி, முட்டாக்கட்டி, கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி வழியாக ஆறு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சிங்கம்புணரி நாவிதன் ஊரணிக்கு அழைத்து வந்தனர். அங்கு மரத்தடியில் சூலாயுதமாய் வீற்றிருக்கும் சுவாமிக்கு பூஜை செய்து பின்னர் சாமி ஆடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகம் எடுத்து தலையில் வைத்து 6 பேர் சுமக்கும் 6அடி நீளம் உள்ள இரண்டு அறிவாள்கள் மீது ஏறி சாமியாடியபடி புறப்பட்டார். உடன் பெண் பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து திண்டுக்கல்-காரைக்குடி சாலை, பெரிய கடை வீதி வழியாக நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கீழத்தெருவில் உள்ள மழுவெந்தி கருப்பர் கோவிலை வந்தடைந்தனர். சுமார் 6 கிலோ மீட்டர் அரிவாள் மீது ஏறி வந்த ஊர்வலத்தில் பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார் நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
Next Story