6 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

குஜிலியம்பாறை அருகே 6 வீடுகளின் பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை - குஜிலியம்பாறை போலீசார் விசாரணை
திண்டுக்கல்லை அடுத்த குஜிலியம்பாறை அருகே கரிகாலி பகுதியில் உள்ள சிமெண்ட் பேக்டரியின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 6 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து 70 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை. குஜிலியம்பாறை, கரிக்காலியில் சிமெண்ட் பேக்டரி அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் பழனிச்சாமி, கார்த்திகேயன், கருப்பையா, வேல்முருகன், கவியரசன், தாமரைக்கண்ணன் ஆகிய 6 பேர்களின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து 70 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவை கொள்ளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே பகுதியில் கொள்ளையர்கள் சிமெண்ட் ஆலையின் முதுநிலை மேலாளர் திருநாவுக்கரசு(55) என்பவர் வீட்டில் 170 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சம்பவ இடத்தில் வேடசந்தூர் டிஎஸ்பி.பவித்ரா தலைமையில் குஜிலியம்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story