கணினி மையத்தில் ரூ.6 லட்சம் பொருட்கள் திருட்டு !
திருட்டு
சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 45). இவர் பள்ளப்பட்டி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் கணினி மையம் நடத்தி வருகிறேன். சம்பவத்தன்று மையத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.6 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான கணினி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் கிரண்குமார் (48). இவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனக்கு சொந்தமான கட்டிடத்தில் ஒருவர் வாடகைக்கு கணினி மையம் நடத்தி வந்தார். அவர் வாடகை பணம் தரவில்லை. இது குறித்து கேட்டதற்கு நான் கணினி பொருட்களை திருடி விட்டதாக புகார் கொடுத்து உள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 2 பேர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.