லாரி உரிமையாளர் சங்க உறுப்பினருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லாரி உரிமையாளர் சங்க உறுப்பினருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லாரி உரிமையாளர் சங்க உறுப்பினருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு: இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவு

லாரி உரிமையாளர் சங்க உறுப்பினருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு: இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவு

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சேர்ந்தவர் குமார் (56). அவர், லாரி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் டூ வீலர் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர், உறுப்பினராக இருந்து வந்த, நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம். அனைத்து உறுப்பினர்களுக்கு, நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனத்தில், குருப் இன்சூரன்ஸ் எடுத்திருந்தது. குரூப் இன்சூரன்ஸ் திட்டப்படி, இறந்தவரின் மனைவி தேவகி, மகன் அமர்நாத், மகள் கோகிலா ஆகியோர், இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை ரூ. 10 லட்சம் வழங்குபடி, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மனு தாக்கல் செய்துள்ளனர். விபத்தில் இறந்த குமாருக்கு, கனகரக வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே உரிமம் உள்ளது. இருசக்கர வாகனத்தை லைசென்ஸ் இல்லாமல் அவர் ஓட்டியதால், இன்சூரன்ஸ் தொகையை கொடுக்க முடியாது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில், இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என, தேவகி, அமர்நாத், கோகிலா ஆகியோர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு வழங்கிய குரூப் இன்சூரன்ஸ் பாலிசியில், உறுப்பினர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டு இறப்பு ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை வழங்கப்பட மாட்டாது என நிபந்தனை உள்ளது என்று, இன்சூரன்ஸ் கம்பெனி வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் வாதிட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், இரு சக்கர வாகனத்தை லைசென்ஸ் இல்லாமல் ஓட்டிய குமார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவர் ஹெல்மட்டும் அணியவில்லை. அவரது செயல் சட்டத்தை மீறியது உண்மை என்றாலும், பாலிசி நிபந்தனையில் குற்றம் புரியும் நோக்கத்துடன், சட்டத்தை மீறி செயல்படும்போது இறந்தால் மட்டுமே, இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாது என்று உள்ளது. அதனால், இன்சுரன்ஸ் நிறுவனம் இறந்து போனவரின் வாரிசுகளுக்கு, இன்சூரன்ஸ் தொகையை வழங்காதது சேவை குறைபாடு. இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை ரூ. 10 லட்சம் என்றாலும், இறந்து போனவர் சட்டத்தை மீறி அஜாக்கிரதையாக செயல்பட்டதால், இறப்பில் அவருக்கும் பங்கு உள்ளதை கருதி, இன்சூரன்ஸ் நிறுவனம் பாதி இன்சூரன்ஸ் தொகை ரூ. 5 லட்சம் மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக, ஒரு லட்சம் சேர்த்து ரூ. 6 லட்சம், இறந்து போனவரின் வாரிசுகளுக்கு, நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம், நான்கு வாரங்களுக்குள், ரூ. 6 லட்சம் வழங்க தவறினால், 2020, அக்டோபர் முதல், பணம் வழங்கப்படும் நாள் வரை, ஆண்டுக்கு, 9 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story